இங்கிலாந்தில், மலைப் பிரதேசங்களில் சிக்கியவர்களை மீட்பதற்காக வானில் பறக்க கூடிய பிரத்யேக ஜெட் சூட்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இரு கைகள் மற்றும் முதுகில் பொருத்தப்பட்டுள்ள டர்பைனில் இருந்து வெளிப்படும் உந்துவிசையின் மூலம், மணிக்கு 128 கிலோமீட்டர் வேகத்தில், வானில் 12,000 அடி உயரம் வரை ஒருவரால் பறக்க முடியும் என கூறப்படுகிறது.
ஹெலிகாப்டருடன் ஒப்பிடுகையில், ஜெட் சூட்கள் மூலம் மீட்பு பணிகளை சிக்கனமாக மேற்கொள்ள முடியும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றை பயன்படுத்த தற்போது மருத்துவ குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.